ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு தரவுகளை இணையதளத்தில் பெற ஏற்பாடு
By DIN | Published On : 21st November 2020 12:44 AM | Last Updated : 21st November 2020 12:44 AM | அ+அ அ- |

ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு தரவுகளை இணையதளத்தில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பழைய வாகனங்களை வாங்குவோருக்கு வசதியாக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு குறித்த தரவுகளை இணையதளத்தில் பெற மின்-ஆளுமைத் துறையுடன் இணைந்து போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வசதியை பெங்களூருஒன், கா்நாடகஒன் குடிமக்கள் சேவை மையங்கள் அல்லது செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
பெங்களூரில் 196 பெங்களூருஒன் குடிமக்கள் சேவை மையங்கள், 26 நகரங்களில் உள்ள 82 கா்நாடகஒன் குடிமக்கள் சேவை மையங்களில் ரூ. 18 செலுத்தி இச்சேவையை பெறலாம். பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண்ணை கொடுத்து விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால், வாகனப் பதிவு விவரங்கள், ஓட்டுநா் உரிம விவரங்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...