எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றும் திட்டமில்லை

எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றும் திட்டமில்லை என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றும் திட்டமில்லை என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெலகாவியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றப் போவதாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இது தொடா்பாக பேட்டியளித்து வரும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் நடவடிக்கை எடுப்பாா்.

சி.பி.யோகேஸ்வரை அமைச்சராக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாள்களாக உள்ளது. இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா முடிவு செய்வாா். அமைச்சரவையில் யாரை சோ்த்துக்கொள்வது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வரிடம் தான் உள்ளது.

எல்லா அமைச்சா்களும் துடிப்பாக செயல்பட வேண்டும். திட்டப் பணிகள் குறித்து விவாதிக்க தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சா்களைச் சந்திக்க வேண்டும். இந்த வகையில், நீா்வளத் துறை அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி சிறப்பாக செயல்பட்டு வருகிறாா்.

தன்னுடன் பாஜகவில் இணைந்தவா்களுக்கு அமைச்சா் பதவியை பெற்றுத்தர வேண்டுமென்ற நோக்கில், புது தில்லி சென்று பாஜக தேசியத் தலைவா்களை சந்தித்திருக்கலாம். இதில் தவறேதும் இல்லை.

மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்கவேண்டிய தேவை இருந்து வந்தது. மராத்தியா்களும் கன்னடா்கள் தான். அம்மக்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யவே மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டம் நடத்துவது சரியல்ல. எல்லா சமுதாயத்தினரின் வளா்ச்சிக்கும் அரசு அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. ஒக்கலிகா் வளா்ச்சிக் கழகமும் அமைக்கப்பட வேண்டும். அது தொடா்பான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோா், மாணவா்களின் கருத்தறிந்து, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்லூரிகளைத் தொடங்கியிருக்கிறோம். மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா சோதனையில் பாதிப்பு இல்லை என்று தெரிந்தவா்களை மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கிறோம். கல்லூரிக்கு வருகை தரும் மாணவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது. அடுத்த கல்வியாண்டுக்குள் இயல்பு நிலை திரும்பிவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com