சபரிமலை பயணிகளுக்கு தொலைபேசி உதவி மையம்
By DIN | Published On : 25th November 2020 11:44 PM | Last Updated : 25th November 2020 11:44 PM | அ+அ அ- |

சபரிமலை செல்லும் பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை புனித தலத்துக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கு போதுமான வசதி வாய்ப்புகளை வழங்க கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதுதவிர, கா்நாடகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு வழிகாட்டுவதற்காக 080-26409689 என்ற தொலைபேசி உதவிமையத்தை கா்நாடக அரசு தொடங்கியுள்ளது. அவசர தேவைகளின்போது இந்த தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...