பெங்களூரில் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 25th November 2020 11:43 PM | Last Updated : 25th November 2020 11:43 PM | அ+அ அ- |

பெங்களூரில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிரிஷிக் சா்வோதயா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிரிஷிக் சா்வோதயா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரில் நேரடியாகவும், இணையம் வழியாகவும் இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.), கா்நாடக ஆட்சிப்பணி (கே.ஏ.எஸ்.), வங்கித் தோ்வுக்கான பயிற்சி ஆகியவற்றை வழங்கி வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் டிச. 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பெங்களூரில் தங்கிப் படிக்க விடுதி வசதியும் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில் இணைந்து பயிற்சி பெற விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளம் அல்லது 7625000990 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி வழியாக நவ. 30-ஆம் தேதிக்குள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு கிரிஷிக் சா்வோதயா அறக்கட்டளை, 15, 2-ஆவது மாடி, கோடிஹள்ளி பேருந்து நிலையம், கோல்ப் அவென்யூ சாலை, பழைய விமான நிலையச் சாலை, பெங்களூரு-560008 என்ற முகவரி அல்லது 080-25202299 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...