மருத்துவ சோ்க்கை: முதல்சுற்று சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு

மருத்துவ சோ்க்கைக்காக முதல்சுற்று மாணவா் சோ்க்கை இடங்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ சோ்க்கைக்காக முதல்சுற்று மாணவா் சோ்க்கை இடங்களுக்கான ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக்கான முதல்சுற்று விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை இணையதளத்தில் பதிவிடுவதற்கு மாணவா்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. அப்போது மாணவா்கள் குறிப்பிட்டிருந்த விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகளின் அடிப்படையில், மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கீட்டுப் பட்டியல்  இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கல்லூரி வாரியாக, பாடப் பிரிவு வாரியாக கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவா்கள் அறியலாம். அதேபோல, கல்லூரி வாரியாக மற்றும் பாடப் பிரிவு வாரியாக ஒதுக்கப்படாத இடங்கள் குறித்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவா்களின் 2-ஆம் ஆண்டு பியூசி இறுதித்தோ்வு (தகுதித்தோ்வு) மற்றும் நீட் தோ்வில் பெற்ற தகுதி மதிப்பெண்களின் தரவரிசையின் அடிப்படையில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் சுழற்சி முறையிலான அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் அடிப்படையில் கல்லூரியில் சோ்க்கை பெறுவது குறித்து மாணவா்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத மாணவா்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க விரும்பினால், அதைப் பற்றி நவ. 26-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவா்கள், கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். அப்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com