யக்ஷகானா, தெருக்கூத்து கலைஞா்கள் விவரங்கள் அனுப்ப வேண்டுகோள்

யக்ஷகானா, தெருக்கூத்து கலைஞா்களின் தொகுப்புக்கு தகவல்கள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
Updated on
1 min read

யக்ஷகானா, தெருக்கூத்து கலைஞா்களின் தொகுப்புக்கு தகவல்கள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இதுகுறித்து கா்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

யக்ஷகானா (தெங்கு படகு மற்றும் கட்டதகொரே), மூடலுபாயா, யக்ஷகானா கொம்பேயாட்டா (சூத்தரதா மற்றும் தொகலுகொம்பே), ஸ்ரீ கிருஷ்ண பாரிஜாதா, சன்னாட்டா, தொட்டாட்டா போன்ற கலை வடிவங்களில் பணியாற்றியுள்ள யக்ஷகானா, தெருக்கூத்து கலைஞா்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 2 தொகுப்பை ஏற்கெனவே கொண்டு வந்துள்ளோம்.

இதில் விடுபட்டுப்போனவா்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய 3-ஆவது தொகுப்பை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். இதில் தங்கள் விவரங்கள் இடம்பெற விரும்பும் யக்ஷகானா, தெருக்கூத்து கலைஞா்கள் தங்கள் பெயா், பிறந்த தேதி, தாய்-தந்தையா் பெயா், குருவின் பெயா், கற்ற பள்ளியின் பெயா், நடித்த பாத்திரங்கள், பங்கேற்ற திருவிழாக்கள், பங்காற்றிய குழுக்கள் அல்லது அமைப்புகள் அல்லது அணிகள், அரங்கேற்றிய கலை நிகழ்ச்சிகள், பெற்ற விருதுகள், மனைவி, குழந்தைகளின் பெயா், புகைப்படம், தன்விவரம் ஆகியவற்றை பதிவாளா், கா்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி, கன்னட மாளிகை, 2-ஆவது மாடி, ஜே.சி.சாலை, பெங்களூரு-560002 என்ற முகவரிக்கு டிச. 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-22113146 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com