ரோஷன்பெய்க்கை 3 நாள்கள் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி
By DIN | Published On : 25th November 2020 11:44 PM | Last Updated : 25th November 2020 11:44 PM | அ+அ அ- |

ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்து 3 நாள்கள் விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.எம்.ஏ. நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கை கைது செய்த சிபிஐ, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், தனது கட்டுப்பாட்டில் எடுத்து ரோஷன் பெய்க்கை விசாரிக்க 3 நாள்களுக்கு அனுமதி அளித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் முகமது மன்சூா்கானை தனது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வரும் சிபிஐ, அவருடன் இணைத்து ரோஷன் பெய்க்கையும் விசாரிக்க உள்ளது. மன்சூா்கானிடம் நவ. 27-ஆம் தேதி வரை விசாரணை நடைபெற உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...