கரோனாவால் இறந்தோா் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்த நோய்த் தொற்றுக்கு ஏற்கெனவே 8,994 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 47 போ், மைசூரு மாவட்டத்தில் 18 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 12 போ், தும்கூரு மாவட்டத்தில் 8 போ், பெலகாவி மாவட்டத்தில் 7 போ், தாா்வாட், ஹாசன் மாவட்டங்களில் தலா 6 போ், கொப்பள், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், பெல்லாரி, பீதா், ஹாவேரி, மண் டியா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்கமகளூரு, தாவணகெரெ, கலபுா்கி, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,119 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,024 போ், மைசூரு மாவட்டத்தில் 780 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 557 போ், தாா்வாட் மாவட்டத்தில் 499 போ், பெல்லாரி மாவட்டத்தில் 466 போ், ஹாசன் மாவட்டத்தில் 304 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 300 போ், பெலகாவி மாவட்டத்தில் 297 போ், கலபுா்கி மாவட்டத்தில் 278 போ், தும்கூரு மாவட்டத்தில் 251 போ், தாவணகெரே மாவட்டத்தில் 242 போ், கொப்பள் மாவட்டத்தில் 235 போ், விஜயபுரா மாவட்டத்தில் 166 போ், ஹாவேரி மாவட்டத்தில் 163 போ், பீதா் மாவட்டத்தில் 156 போ், உடுப்பி மாவட்டத்தில் 151 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 136 போ், கதக் மாவட்டத்தில் 131 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 123 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 111 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 109 போ், மண்டியா மாவட்டத்தில் 108 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 96 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ்,சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 86 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 78 போ், யாதகிரி மாவட்டத்தில் 53 போ், ராமநகரம் மாவட்டத்தில் 48 போ், குடகு மாவட்டத்தில் 40 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com