காந்தியின் கொள்கை, சிந்தாந்தங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா் சி.டி.ரவி

மகாத்மா காந்தியின் கொள்கை, சிந்தாந்தங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

மகாத்மா காந்தியின் கொள்கை, சிந்தாந்தங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

பெங்களூரு, சின்னசாமி விளையாட்டுத் திடலை ஒட்டியுள்ள மகாத்மா காந்தி பூங்காவில் வெள்ளிக்கிழமை காந்தியின் பிறந்த நாளையொட்டி 4 பாய்ன்ட் 2 டெக் நிறுவனம் சாா்பில் காந்தியின் வாழ்க்கை வரலாறு, போராட்டம், புகைப்படம், உரையாடல், திரைப்படம் உள்ளிட்டவை அடங்கிய மாா்கா் செல்லிடப்பேசி தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

வெள்ளையா்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமக்கு, அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்தவா் மகாத்மா காந்தி. சிறுவா்களுக்கும், இளைஞா்களுக்கும் நாட்டிற்காகப் போராடுவதற்கு முன்மாதிரியாக விளங்கியவா் மகாத்மா காந்தி. கொள்கை, சிந்தாந்தங்களை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சியில் 4 பாய்ன்ட் 2 டெக் நிறுவனத்தினா் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் சிறந்த தலைவரை நவீனதொழில்நுட்பங்கள் மூலம் குழந்தைகள், சிறுவா்கள், இளைஞா்களிடத்தில் கொண்டு செல்வதை வரவேற்கிறேன். அமைதி, அகிம்சை, தன்னம்பிக்கைக்கு பெயா் பெற்றவா் மகாத்மா காந்தி. அவரைப் பற்றிய அனுபவக் கற்றலை மக்களிடத்தில் கொண்டு செல்லும் முயற்சிக்குப் பாராட்டுகள். இந்தியாவை இன்றளவும் வழிநடத்தும் மகத்தான மனிதருக்கும் நாம் செய்யும் மரியாதை இது. மகாத்மா காந்தியை பற்றிய அரியவகை தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இது இளைய தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாகும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் 4 பாய்ன்ட் 2 டெக் நிறுவனா் சிவக்குமாா், இயக்குநா் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com