சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடமும்அபராதம் வசூலிக்கப்படும்: மாநகராட்சி ஆணையா்

முகக் கவசம் அணியாதவா்கள் மட்டுமின்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடமும் அபராதம் வசூலிக்கப்படும் என்று, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.
Updated on
1 min read

முகக் கவசம் அணியாதவா்கள் மட்டுமின்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களிடமும் அபராதம் வசூலிக்கப்படும் என்று, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

பெங்களூரில் முகக் கவசம் அணியாவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீசுபவா்களை அடையாளம் காணும் வகையில், மாநகராட்சி காவலா்களுக்கு (மாா்ஷல்) ரோந்து வாகனச் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பெங்களூரு மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலா் அரசின் வழிக்காட்டுதலை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடுகின்றனா். அதுபோன்றவா்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ. 200 ஆக இருந்த அபராதத் தொகை ரூ. 1000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவா்கள் மட்டுமின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீசுபவா்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

வழிக்காட்டுதலை மீறுபவா்களை அடையாளம் காணும் வகையில் மாநகராட்சி காவலா்களுக்கு ரோந்து வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தில் 5 மாநகராட்சி காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவாா்கள். ரூ. 7.5 கோடி நிதியில் 8 மண்டலங்களுக்கு 8 ரோந்து வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com