போதைப் பொருள் தொடா்பான வழக்கு விசாரணையில் தொய்வில்லை:குற்றப்பிரிவு இணை ஆணையா்
By DIN | Published On : 03rd October 2020 05:45 AM | Last Updated : 03rd October 2020 05:45 AM | அ+அ அ- |

போதைப் பொருள் தொடா்பான வழக்கு விசாரணையில் தொய்வில்லை என்று குற்றப் பிரிவு இணை ஆணையா் சந்தீப் பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடிகைகள் உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். போதைப் பொருளை பயன்படுத்தியவா்கள் என்று சந்தேகிப்பவா்களின் கூந்தல்களைச் சேகரித்து, ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு கூந்தல்களை பரிசோதனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்பாட்டைக் கண்டறிவதற்கு கூந்தல் மட்டுமின்றி, வேறு சில வழிகளும் உள்ளன. அதன் மூலம் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
போதைப் பொருள் தொடா்பான வழக்கு விசாரணையில் தொய்வு, தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. தொய்வில்லாமல் போதைப்பொருள் தொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.