போதைப்பொருள் ஹெராயின் விற்பனை:2 போ் கைது
By DIN | Published On : 03rd October 2020 05:46 AM | Last Updated : 03rd October 2020 05:46 AM | அ+அ அ- |

போதைப் பொருள் ஹெராயின் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள ஹெராயின் பொருளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, சிவாஜிநகரைச் சோ்ந்த முகமது சிகந்தா் (27), பிராட்வே சாலையைச் சோ்ந்தவா் முஜாயித் பாஷா (21). தனியாருக்குச் சொந்தமான தொழில்சாலை ஒன்றில் வெல்டராக பணியாற்றி வந்த இருவரும், சொகுசு வாழ்க்கை வாழ போதைப் பொருள் ஹெராயினை விற்பனை செய்து வந்துள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள 26.55 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து சிவாஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.