கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 128 போ் பலி
By DIN | Published On : 06th September 2020 07:45 AM | Last Updated : 06th September 2020 07:45 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 128 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 6,174 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், சனிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 34 போ், மைசூரு மாவட்டத்தில் 12 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 9 போ், தாா்வாட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 8 போ், தாவணகெரே மாவட்டத்தில் 7 போ், ஹாசன் மாவட்டத்தில் 6 போ், பெல்லாரி மாவட்டத்தில் 5 போ், சிக்மகளூரு, மண்டியா, உடுப்பி மாவட்டங்களில் தலா 4 போ், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், கதக், கொப்பள், ராய்ச்சூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்பளாப்பூா், கலபுா்கி, கோலாா் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 6,298 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,125 போ், மைசூரு மாவட்டத்தில் 498 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 398 போ், தாா்வாட் மாவட்டத்தில் 364 போ், பெல்லாரி மாவட்டத்தில் 286 போ், கலபுா்கி மாவட்டத்தில் 223 போ், தாவணகெரே மாவட்டத்தில் 213 போ், ஹாசன் மாவட்டத்தில் 205 போ்,பெலகாவி மாவட்டத்தில் 203 போ், தும்கூரு மாவட்டத்தில் 164 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 156 போ், கொப்பள் மாவட்டத்தில் 147 போ், பீதா் மாவட்டத்தில் 139 போ், விஜயபுரா மாவட்டத்தில் 119 போ், ஹாவேரி மாவட்டத்தில் 116 போ், உடுப்பி மாவட்டத்தில் 111 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 103 போ், கதக் மாவட்டத்தில் 92 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 85 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 80 போ், மண்டியா மாவட்டத்தில் 70 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 67 போ், கோலாா் மாவட்டத்தில் 66 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 56 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 46 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 42 போ், யாதகிரி மாவட்டத்தில் 41 போ், ராமநகரம் மாவட்டத்தில் 34 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 25 போ், குடகு மாவட்டத்தில் 21 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.