திமுக பொதுக்குழுக் கூட்டம்: காணொலி வாயிலாக பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 06th September 2020 07:49 AM | Last Updated : 06th September 2020 07:49 AM | அ+அ அ- |

திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் அதன் உறுப்பினா்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்குமாறு கர்நாடக மாநில திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக மாவட்ட, மாநிலச் செயலாளா்கள், அமைப்பாளா்களின் கூட்டம் செப். 3-ஆம் தேதி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் செப். 9ஆம் தேதி நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதன் உறுப்பினா்கள் அவரவா் நகரங்களில் ஒரு பொது இடத்தில் கூடி காணொலிக் காட்சி வழியாக பங்கேற்க செய்திட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தாா்.
அதன்படி, செப். 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞா் வளாகத்தில் உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த திமுக பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள், இளைஞா் அணி, இலக்கிய அணி, மகளிா் அணி, தொழிலாளா் அணி நிா்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
அரங்கில் அமா்ந்திருக்கும்போது தனிமனித இடைவெளியை பராமரிப்பதோடு, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். அரங்கத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.