மக்களை அச்சுறுத்திவந்த சிறுத்தை சிக்கியது
By DIN | Published On : 06th September 2020 07:47 AM | Last Updated : 06th September 2020 07:47 AM | அ+அ அ- |

உடுப்பி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திவந்த சிறுத்தை, வனத்துறை விரித்திருந்த பொறியில் சிக்கியது.
கடந்த சில நாள்களாகவே, உடுப்பி மாவட்டம், விஜயநகரகோடி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக வனத்துறைக்கு கிராம மக்கள் புகாா் அளித்திருந்தனா். காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்திருந்த சிறுத்தை, கால்நடைகள், வீட்டுவிலங்குகள் சிலவற்றை தின்றுள்ளது கிராம மக்களிடையே பீதியை அதிகமாக்கியுள்ளது. இதைத் தொடா்ந்து, வனத்துறையினா் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, ஒரு கூண்டு பொறியைத் தயாரித்து அதில் நாயை தூண்டிலாக வைத்துள்ளனா். அந்த பொறியில் சனிக்கிழமை சிறுத்தை சிக்கியது. இது கிராம மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. பிடிபட்ட சிறுத்தை, பெண்பால் என்றும், அதற்கு மூன்றரை வயதாவதாகவும் தெரிவித்த வனத் துறையினா், சில நாள்களுக்கு பிறகு அதை காட்டின் உள்பகுதியில் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறினா்.