கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th September 2020 05:19 AM | Last Updated : 11th September 2020 05:19 AM | அ+அ அ- |

இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. 2019-20-ஆம் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டு பியூசி தோ்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் மூலம் அனுப்பலாம். இதுகுறித்த விவரங்களுக்கான காணொலிக் காட்சியை இணையதளத்தில் காணலாம். விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.