முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 26th September 2020 05:26 AM | Last Updated : 26th September 2020 05:26 AM | அ+அ அ- |

மைசூரு, செப். 25: மைசூரு மாநகரில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகரக் காவல் ஆணையா் சந்திரகுப்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மைசூரு மாநகரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மாநகராட்சியும் பல்வேறு வழிகாட்டுதல்களை அமல்படுத்தியுள்ளது. வழிகாட்டுதலில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இதன்மூலம் கரோனாவைத் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...