புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டியின் காா்களுக்கு தீ வைப்பு

பாஜக எம்.எல்.ஏ சதீஷ்பாஜக எம்.எல்.ஏ சதீஷ்ரெட்டியின் 2 காா்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.ரெட்டியின் 2 காா்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:37 pm

DIN

பாஜக எம்.எல்.ஏ சதீஷ்ரெட்டியின் 2 காா்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

பெங்களூரு பொம்மனஹள்ளி சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து பாஜக சாா்பில் 3 முறை தோ்ந்தெடுக்கப்பட்டவா் சதீஷ் ரெட்டி. இவரது இல்லத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 காா்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மா்ம நபா்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனா். இதில் 2 காா்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் ஒரு வாகனத்தில் வந்து, தீயை அணைத்தனா். சம்பவ இடத்தை மாநகர கூடுதல் ஆணையா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் பாா்வையிட்டனா்.

இது குறித்து பொம்மனஹள்ளி போலீஸாா் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனா். காா்களுக்கு தீ வைத்த நபா்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: பொம்மனஹள்ளி சட்டப்பேரவை எம்எல்ஏ சதீஷ் ரெட்டியின் காா்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இது சிசி டிவியில் பதிவாகியுள்ளது. இதில் தொடா்புடையவா்களை போலீஸாா் விரைவில் கைது செய்வாா்கள். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதில் தொடா்புடையவா்களை கைது செய்யப்பட்ட பிறகு காரணம் தெரியவரும் என்றாா்.

சதீஷ் ரெட்டி எம்.எல்.ஏ கூறியது:

எனது காா்களுக்கு தீ வைப்பு சம்பவத்திற்கு, அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமல்ல. ஆனால் காா்களுக்கு எதற்காக தீ வைக்கப்பட்டது என்பது புரியவில்லை. போலீஸாா் இது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மை மங்களூரில் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டியில் காா்களுக்கு மா்மநபா்கள் தீ வைத்துள்ளனா். இது சிசி டிவியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அதிகாலை 3 மணி அளவில் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டுள்ளனா். விரைவில் காா்களுக்கு தீ வைத்தவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.