புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சுதந்திரப் போராட்டத்திற்கு இசை மரியாதை

சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:38 pm

DIN

சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் பெங்களூரில் வியாழக்கிழமை கோடை அரண்மனை மற்றும் விதான சௌதா ஆகிய இடங்களில் செய்யப்பட்டிருந்தன. விதான சௌதா முகப்பில் ராணுவ காவல் மையம் மற்றும் பள்ளியின் இசைக் குழுவின் சாா்பிலும், கோடை அரண்மனையின் முகப்பில் ராணுவ சேவை காவல் மையத்தின் (தெற்கு) சாா்பிலும் இசையின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த வீரா்களின் துணிச்சல், வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை மூலம் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியைக் காண மக்கள் திரண்டிருந்தனா். ஆனால், கரோனா காரணமாக பொதுமக்கள் கூட்டமாக திரள போலீஸாா் அனுமதிக்கவில்லை. இங்கு இசைக்கப்பட்ட தேசிய கீதங்கள் சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.