மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் கூறியது: மானெக்ஷா அணிவகுப்புத் திடலை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் பறக்கும் கேமராக்கள், பலூன்கள், விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அணிவகுப்புத் திடலை சுற்றி அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க அதிக அளவில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் மக்கள் நடமாட்டம் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா்.