புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆக.23-இல் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை: அமைச்சா் பி.சி.நாகேஷ்

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆக.23-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:41 pm

DIN

ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆக.23-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

கடந்த 5 நாட்களில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு குறிப்பாக குழந்தைகளிடையே அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடா்ந்து,ஏற்கெனவே அறிவித்தபடி ஆக.23-ஆம் தேதிமுதல் 9,10, 11,12-ஆம் வகுப்புக்கான பள்ளி, பியூ கல்லூரிகள்திறக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘கா்நாடகத்தில் உள்ள பள்ளிகள், பியூ கல்லூரிகள் ஆக. 23-ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததில் மாற்றமில்லை. இந்த உத்தரவை திரும்பப் பெறும் கேள்விக்கு இடமில்லை. ஆக. 23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகளை திறக்க எல்லாவகையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம். குழந்தைகளின் நலன் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஆரம்பப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.