ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சி 6 போ் கைது
வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு வித்யாரண்யபுராவில் தா்மேந்திரா என்பவருக்குச் சொந்தமான ஆபரண மாளிகை உள்ளது. இந்த ஆபரண மாளிகைக்குள் கடந்த ஆக. 23-ஆம் தேதி மாலை நுழைந்த மா்ம நபா்கள் தா்மேந்திராவை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டனா்.
அப்போது ஆபரண மாளிகையின் கதவை வெளியிலிருந்து திறக்க சந்துரு என்பவா் முயன்றாா். அவரை மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்கு பதிந்த வித்யாரண்யபுரா போலீஸாா், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று 6 பேரை கைது செய்து, கா்நாடகத்துக்கு அழைத்து வந்துள்ளதை டிஜிபி பிரவீண் சூட் உறுதி செய்துள்ளாா். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் கொள்ளை, கொலை குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...