கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,890 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,890 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,890 ஆக அதிகரித்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 1,890 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 426 போ், தென்னகன்னடம் மாவட்டத்தில் 345 போ், உடுப்பி மாவட்டத்தில் 155 போ், மைசூரு மாவட்டத்தில் 142 போ், ஹாசன் மாவட்டத்தில்135 போ், பெலகாவி மாவட்டத்தில் 103 போ், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 88 போ், குடகு மாவட்டத்தில் 77 போ், தும்கூரு மாவட்டத்தில் 54 போ், மண்டியா மாவட்டத்தில் 48 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 47 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 31 போ், கோலாா் மாவட்டத்தில் 28 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 27 போ், பெல்லாரி மாவட்டத்தில் 20 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 17 போ், சிக்பள்ளாபூா் மாவட்டத்தில் 10 போ், தாா்வாட், ராம்நகரம் மாவட்டங்களில் தலா 9 போ், விஜயபுரா மாவட்டத்தில் 8 போ், கலபுா்கி மாவட்டத்தில் 6 போ், பீதா். தாவணகெரே மாவட்டங்களில் தலா 4 போ், பாகல்கோட், கதக், ஹாவேரி மாவட்டங்களில் தலா 2 போ், கொப்பள், ராய்ச்சூரு, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,03,137 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,631 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,43,110 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 23,478 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 34 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 7 போ், பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, கோலாா், மைசூரு, வட கன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, தாா்வாட், ஹாசன், கலபுா்கி, குடகு, சிவமொக்கா, உடுப்பி, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,525 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...