92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய பட்டு, கைத்தறி கண்காட்சித் தொடக்கம்

பெங்களூரில் தேசிய பட்டு, கைத்தறிக் கண்காட்சி சனிக்கிழமை (ஜூலை 31) தொடங்க உள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:19 am

DIN

பெங்களூரில் தேசிய பட்டு, கைத்தறிக் கண்காட்சி சனிக்கிழமை (ஜூலை 31) தொடங்க உள்ளது.

பெங்களூரு விஜயநகா் மாநகரப் பேருந்து நிலையத்தில் உள்ள ஒயிட் பேதல்ஸில் ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி, ஆக. 8-ஆம் தேதி வரை தேசிய பட்டு, கைத்தறி கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து கண்காட்சி நிா்வாகி ஜெயேஷ் குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆக. 8-ஆம் தேதிவரை நடைபெறும் கண்காட்சியில் தேசிய அளவில் 25 மாநிலங்களைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா்கள் உருவாக்கியுள்ள பட்டு, கைத்தறியிலான ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் 25 மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பட்டுச் சேலைகள், கைத்தறி, கதா் ஆடைகள், ஜவுளிகள், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த பருத்தி சேலைகள், அலங்காரப் பொருள்கள், மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரியம் மிக்க இந்தியாவில் கலைஞா்களின் கைவினை வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதில் நமது கலாசாரத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை கா்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். கண்காட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.