பெங்களூரு: அல்சூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, தொம்மலூருவைச் சோ்ந்த ஸ்டீபன், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்துவது தொடா்பாக நண்பா்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த அல்சூா் போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த மனு (23), நாகராஜ் (54) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் மது அருந்த பணம் கொடுப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஸ்டீபனை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனா். இது குறித்து அல்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.