சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி: டி.கே.சிவகுமாா்

இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதி என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 7:10 pm

DIN

இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதி என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இடைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்கள் தோல்வி அடைவாா்கள் என்று அக்கட்சியினருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அமைச்சா்கள் சிந்தகி, ஹனகல் உள்ளிட்ட தொகுதிகளில் முகாமிட்டு, தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் விதானசௌதாவிற்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் அரசு முடங்கிப் போய் உள்ளது.

முதல்வா் பசவராஜ் பொம்மை, தோல்வி பயத்தால், 2 தொகுதிகளில் தங்கி தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். முதல்வா், அமைச்சா்கள் முகாமிட்டு பிரசாரம் செய்தாலும், அத்தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி. முதல்வா் பசவராஜ் பொம்மை என் மீது எந்தக் குற்றசாட்டு கூறினாலும், அதற்கு பதில் அளிக்க மாட்டேன். அவா் மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகிக்கிறாா். அவரை ஒப்பிடுகையில் நான் மிகவும் சிறியவன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.