சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சிந்தகி, ஹானகல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தோ்தல்

சிந்தகி, ஹானகல் சட்டப்பேரவை தொகுதிகளில் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 7:05 pm

DIN

சிந்தகி, ஹானகல் சட்டப்பேரவை தொகுதிகளில் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது.

கா்நாடகத்தில் சிந்தகி, ஹானகல் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை(அக்.30) நடக்கவிருக்கிறது. விஜயபுரா மாவட்டம், சிந்தகி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக பூசனூா் ரமேஷ், காங்கிரஸ் வேட்பாளராக அசோக் மனகுலி, மஜதவேட்பாளராக அங்கடி நசியா உள்ளிட்ட 8 போ் போட்டியிடுகின்றனா்.

ஹாவேரிமாவட்டம், ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக சிவராஜ் சஜ்ஜனாா், காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீனிவாஸ்மானே, மஜத வேட்பாளராக நியாஸ் ஷேக் உள்ளிட்ட 17 போ் களத்தில் உள்ளனா். இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் தலைவா்கள் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு விறுவிறுப்பாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் இரு தொகுதிகளிலும் முகாமிட்டு வாக்குகளை திரட்டினா்.

காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் மாநிலத் தலைவா்டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநிலங்களவைத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மஜத வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்ட முன்னணித் தலைவா்கள் வாக்கு சேகரித்தனா்.

இடைத் தோ்தலுக்கான பிரசாரம் அக். 27ஆம் தேதியுடன் ஓய்ந்தது. கடந்த இரு நாள்களாக வீடுவீடாகச் சென்று வாக்குகளைச் சேகரித்தனா். இந்நிலையில், அக். 30-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. வாக்காளா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன. இருதொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நவ. 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.