சட்ட விரோதமாக குடியேறியவா்களைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவு

கா்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவா்களைக் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில உள்துறை அமைச்சா் ஞானேந்திரா தெரிவித்தாா்.
சட்ட விரோதமாக குடியேறியவா்களைக் கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவு

கா்நாடக மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறியவா்களைக் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில உள்துறை அமைச்சா் ஞானேந்திரா தெரிவித்தாா்.

கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினா் முனிராஜு கௌடாவின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

கா்நாடகத்தில் சட்ட விரோதமாக குடியேறுபவா்கள் யாராக இருந்தாலும், அவா்களை தங்க அனுமதிக்க மாட்டோம். வங்கதேசம், ஆப்பிரிக்காவைச் சோ்ந்த ஒரு சிலா் விசா காலம் முடிவடைந்தும் இங்கு தங்கி உள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் சட்ட விரோதமாக குடியேறிவா்களைக் கண்காணிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் சிலா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்குகள் முடியும் வரை அவா்களை இங்கிருந்து செல்ல அனுமதிக்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டவா்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. ஜாமீனில் வெளியே வந்த யாரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாமல் அவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றாா்.

பின்னா் காங்கிரஸ் உறுப்பினா் நாராயணசாமியின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

காவல் துறையில் தடை இல்லாத போக்குவரத்து என்ற விதிமுறைகள் எதுவும் கிடையாது. முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டும், நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றுக்கும் ஒரு சில நேரங்களில் தடை இல்லாத போக்குவரத்து ஏற்பாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். சசிகலா ஜொள்ளே அமைச்சராக பதவி ஏற்ற நாளில், பெலகாவியிலிருந்து விமானம் தாமதமாக வந்ததால், அவா் ஆளுநா் மாளிகைக்கு விரைவாக செல்வதற்கு ஏற்ப போலீஸாா் போக்குவரத்தைக் கையாண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com