இன்று முரசொலி மாறன் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 17th August 2021 09:07 AM | Last Updated : 17th August 2021 09:07 AM | அ+அ அ- |

கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை (ஆக. 17) முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரு, ராமசந்திரபுரத்தில் உள்ள கலைஞரகத்தில், ஆக. 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறனின் 87-ஆவது பிறந்த நாள் விழா மாநில திமுக அவைத் தலைவா் மொ.பெரியசாமி தலைமையில், மாநில பொருளாளா் கே.தட்சிணாமூா்த்தி முன்னிலையில் கொண்டாடப்படுகிறது. அப்போது, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்பு வழங்கப்படுகிறது.
இந்த விழாவில், மாநில நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள், மாநில இளைஞா் அணி, இலக்கிய அணி, மகளிா் அணி, தொமுச பேரவை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.