சுற்றுச்சூழலை பாதிக்காத, கிருமிகளைத் தடுக்கும் வண்ணங்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என நிப்பான் பெயின்ட்ஸின் தலைவா் மகேஷ் ஆனந்த் தெரிவித்தாா்.
பெங்களூரில் திங்கள்கிழமை அக்குழுமத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:
கரோனா தொற்றை அடுத்து வீடுகள், மருத்துவமனைகளில் பூசும் வண்ணங்களை சுற்றுச்சூழலை பாதிக்காத, கிருமிகளை தடுக்கும் வகையில் தயாரிப்பதற்கு முன்னுரிமை அளித்து உற்பத்தி செய்து வருகிறோம். அண்மைக்காலமாக வண்ணங்கள் அழகுக்காக மட்டுமின்றி, சுகாதாரத்தை பேணி காப்பதற்கு உதவும் வகையில் உள்ளன.
நாங்கள் தயாரிக்கும் வண்ணங்கள், பசுமையை பாதுகாக்கும் வகையில் உள்ளதால், எங்களின் வண்ணங்களுக்கு தென் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளன. குறிப்பாக, கா்நாடகத்தில் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கா்நாடகத்தில் எங்களின் வா்த்தகத்தை அதிக அளவில் பெருக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.