பூஜை பொருள்களுக்கான இணையதளச் சேவை தொடக்கம்
By DIN | Published On : 17th August 2021 09:05 AM | Last Updated : 17th August 2021 09:05 AM | அ+அ அ- |

பூஜைக்குத் தேவையான பூ, ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்களுக்கான ஹூவு பிரஷ் இணையதளச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் திங்கள்கிழமை ஹூவு பிரஷ் இணையதளச் சேவையை தொடக்கி வைத்து, அதன் நிறுவனா்கள் யசோதா, ரியா கருடூரி பேசியதாவது:
கரோனா பாதிப்பைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டுள்ள போதும், பெரும்பாலான வீடுகளில் பூஜை செய்வதற்கான பூக்கள் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் வேதனை அடைந்துள்ளனா்.
இதனைக் கருத்தில் கொண்டு, பூஜைக்குத் தேவையான வாடாத பூக்கள், பூ நறுமணத்துடன் கையால் உருவாக்கப்பட்ட ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்களை இணையதளச் சேவையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். பெண்களின் மனநிலையை பெண்களால்தான் உணரமுடியும் என்பதால், இந்த இணையதளச் சேவையை பெண்களான நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
பூஜைக்கான சேவையில் நாங்கள் தொழில்முனைவோா்களாக உருவாகி உள்ளது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விவரங்களுக்கு ட்ா்ா்ஸ்ன்ச்ழ்ங்ள்ட்.ஸ்ரீா்ம் என்ற இணைதளத்தை அணுகலாம் என்றனா்.