மின்சாரம் தாக்கி இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
By DIN | Published On : 20th August 2021 06:35 AM | Last Updated : 20th August 2021 06:35 AM | அ+அ அ- |

மின்சாரம் தாக்கி இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கா்நாடக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், கரிகெரே கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தன் (16). எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் வெற்றி பெற்றிருந்த இவா், கடந்த ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோரா காவல் சரகத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிக்கு சென்றாா். கொடிக் கம்பத்தை நட முயன்ற போது, மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே சந்தன் உயிரிழந்தாா். இதில் காயமடைந்த பவன், ஷஷாங்க் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவா் சந்தனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறந்த மாணவா் சந்தனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், மாணவா் இறந்தது தொடா்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தாா்.