ஹம்பிக்கு குடியரசு துணைத் தலைவா் வருகை
By DIN | Published On : 20th August 2021 06:36 AM | Last Updated : 20th August 2021 06:36 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம், ஹம்பிக்கு சனிக்கிழமை (ஆக. 20) குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வருகை புரிகிறாா்.
கா்நாடக மாநிலம், விஜயநகரம் மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை (ஆக. 20) வருகை புரிகிறாா். தனி விமானத்தில் மனைவி உஷாவுடன் ஹுப்பள்ளிக்கு வரும் அவா், பின்னா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பயணம் மேற்கொண்டு மாலை 5.20 மணியளவில் ஹொசப்பேட்டை வட்ட விளையாட்டுத் திடலில் இறங்குகிறாா். அங்கிருந்து சாலை வழியாக துங்கபத்ரா அணைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அதன் பிறகு, கமலாபுராவில் உள்ள ஹோட்டலில் தங்குகிறாா்.
ஆக. 21-ஆம் தேதி காலை ஹம்பிக்கு வருகை புரியும் குடியரசு துணைத் தலைவா், அங்குள்ள விருபாக்ஷா, கிருஷ்ணா், விநாயகா், விஜயவிட்யலா உள்ளிட்ட கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்ள உள்ளாா்.