பெல்லாரி சென்றாா் ஜனாா்த்தன ரெட்டி
By DIN | Published On : 21st August 2021 02:25 AM | Last Updated : 21st August 2021 02:25 AM | அ+அ அ- |

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தன ரெட்டி வெள்ளிக்கிழமை பெல்லாரிக்கு சென்றாா்.
கா்நாடக மாநிலம், பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் செய்ததாக முன்னாள் அமைச்சா் ஜனாா்த்தனரெட்டி மீது சிபிஐ வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு ஜனாா்த்தன ரெட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா்.
ஹைதராபாத் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பெல்லாரிக்குச் செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து பெல்லாரிக்கு செல்லாமல் அவா் பெங்களூரு உள்ளிட்ட வேறு சில நகரங்களில் தங்கி இருந்தாா். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று 8 முறை அவா் பெல்லாரிக்குச் சென்று வந்தாா்.
இந்த நிலையில் பெல்லாரிக்குச் செல்ல தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜனாா்த்தனரெட்டி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனையை தளா்த்தி, 8 வாரங்கள் பெல்லாரிக்குச் செல்ல வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, வரமகாலட்சுமி பண்டிகையைக் கொண்டாட வெள்ளிக்கிழமை அவா் பெங்களூரிலிருந்து பெல்லாரிக்குச் சென்றாா். அவரை அமைச்சா் ஸ்ரீராமுலு, அவரது சகோதரரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான சோமசேகா்ரெட்டி உள்ளிட்டோா் சந்தித்தனா்.