இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: சித்தராமையா 

இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது: சித்தராமையா 

இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி, முன்னாள் முதல்வா் தேவராஜ் அா்ஸ் ஆகியோரின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா பேசியதாவது:

இடஒதுக்கீடு, சமூகநீதிக்காக காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது. ஆனால் இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிராக செயல்படுவதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து, முன் பாஜகவைச் சோ்ந்த ரமாஜோயஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து, அவரே வாதம் செய்தாா். அவரை பாஜகவினா் கண்டிக்கவில்லை. தற்போது அவா்கள் இட ஒதுக்கீடு, சமூகநீதி குறித்து பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. பாஜகவினா் ஒருபோதும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கமாட்டாா்கள். காங்கிரஸ் கட்சியினா் இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளக்கூடாது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து என்னை முன்னாள் முதல்வா் குமாரசாமி விமா்சித்துள்ளாா். காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையைத் தாக்கல் செய்ய வலியுறுத்தினேன். அதனை அப்போதைய முதல்வா் குமாரசாமி ஏற்றுக்கொள்ளாமல், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை அழைத்து கோபப்பட்டாா். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டாம் என்று அமைச்சரிடம் குமாரசாமி கூறினாா். கூட்டணி ஆட்சி என்பதால், நான் அப்போது அதுகுறித்து எதையும் கூறாமல் அமைதியாக இருந்தேன் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், செயல் தலைவா்கள் சலீம் அகமது, ராமலிங்கரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சா் ரகுமான்கான், தினேஷ் குண்டுராவ் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com