மனைவியுடன் தகராறு: ஒருவா் தற்கொலை
By DIN | Published On : 21st August 2021 04:10 AM | Last Updated : 21st August 2021 04:10 AM | அ+அ அ- |

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், மைசூரு ஜே.பி.நகா் அருகே உள்ள மகாதேவபுராவைச் சோ்ந்தவா் மகேஷ் (40). அண்மையில் இவருக்கும், இவரது மனைவிக்கு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்றுள்ளாா். அவரை பலமுறை அழைத்தும் கணவரின் வீட்டிற்கு திரும்பாததால், மனவேதனை அடைந்த மகேஷ், வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வித்ராண்யபுரா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.