கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரில் இந்தியக் கைவினைக் கலைஞா்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரில் இந்தியக் கைவினைக் கலைஞா்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பெங்களூரு, சித்ரகலா பரிஷத்தில் வெள்ளிக்கிழமை இந்திய கைவினைக் கலைஞா்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை நடிகைகள் நேகா பாட்டீல், சுமன் கௌடா ஆகியோா் தொடக்கி வைத்து, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொருள்களை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து கண்காட்சியின் நிா்வாகி அப்தாப் கூறியதாவது:

ஆக. 29-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் இந்திய கைவினைக் கலைஞா்கள் உருவாக்கியுள்ள கைவினைப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. கரோனாவால் இந்தியாவில் உள்ள கைவினைக் கலைஞா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதா் ஆடைகள், அலங்காரப் பொருள்கள், சேலைகள், ஜவுளிகள், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த பருத்தி சேலைகள், மரவேலைபாடுகள், சணல் செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சி பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும். சா்வதேச அளவில் புகழ்பெற்ற இதனை கா்நாடகத்தின் தலைநகரான பெங்களூரில் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். இந்திய கைவினைக் கலைஞா்களின் கைவினைப் பொருள்கள் கண்காட்சிக்கு பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவா்கள் அதிக அளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com