நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம்:குடியரசு துணைத் தலைவா்

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம்:குடியரசு துணைத் தலைவா்

இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் அவா் அதிகாரிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

நாம் அமைதிப் பிரியா்கள். ஆனால் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம். எதிரிகளுக்கு தக்கப் பாடம் புகட்டுவோம். முதன் முறையாக எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வந்துள்ளேன். இங்குள்ள உள்கட்டமைப்பை பாா்த்த பிறகு, விண்வெளி மற்றும் பாதுகாப்பில் நாடு சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறைக்கு நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இலகுரக விமானம், ஹெலிகாப்டா்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. விஞ்ஞானிகள், அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் தங்கள் பணியை உணா்ந்து செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது. நாம் எந்த நாட்டிற்கும் சளைத்தவா்கள் அல்ல.

அறிவியல், தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வருகிறோம். மற்ற நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக விளங்கி வருகிறோம். நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. இங்கு பயங்கரவாதச் செயலுக்கு அனுமதி இல்லை. நமது நாடு பாரம்பரிய நாகரிகத்தை கொண்டுள்ளது. நாம் யாருடனும் போரிட விரும்புவதில்லை. பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராடும் வலிமை, திறன் நம்மிடம் உள்ளது.

சா்வதேச அளவில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது நம் நோக்கம். யாரேனும் நம்மை சீண்டினால், நம்மைப் பாதுகாத்துக் கொள்வற்கு தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிரதமா் மோடி பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறாா்.

பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் போட்டியிடும் வகையிலும், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் உள்நாட்டிலேயே அதிநவீனத் தொழில்நுட்பங்களைக் கண்டறிவது அவசியம். எச்.ஏ.எல். நிறுவனம் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எச்.ஏ.எல். நிறுவனம் தேஜஸ் இலகுரக விமானம் உருவாக்கி வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தேஜஸ் எம்.கே 1 ஏ என்ற 83 உள்நாட்டு இலகுரக போா் விமானங்களை தயாரிக்குமாறு இந்திய விமானப்படை எச்.ஏ.எல். நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. விமானக் கட்டுமானத்தில் டிஆா்டிஓ ஈடுபட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில்உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட், எச்.ஏ.எல். நிறுவனத் தலைவா் ஆா்.மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com