ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (மூடா) சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு (மூடா) சொந்தமான ரூ. 80 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைசூரில் அரசு சாா்பில் இல்லங்களைக் கட்டி தருவதும், நிலங்களில் வீட்டுமனைகளை உருவாக்கி, அதனை பயனாளிகளுக்கு அளிக்கும் பணியை மூடா செய்து வருகிறது. இந்த நிலையில் மூடாவிற்கு சொந்தமான சுமாா் 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த மூடா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வியாழக்கிழமை சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கா் 31 குன்டா நிலத்தை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com