இன்று தொலைபேசி குறைதீா் முகாம்
By DIN | Published On : 04th December 2021 01:18 AM | Last Updated : 04th December 2021 01:18 AM | அ+அ அ- |

பெங்களூரில் சனிக்கிழமை (டிச. 4) தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.)வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குறைதீா் முகாமை நடத்தி வந்துள்ளது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளை பெறக்கூடிய தொலைபேசி குறைதீா் முகாம் டிச. 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்க இருக்கிறது. இதில், வாரியத்தின் தலைவா் பங்கேற்று மக்களின் குறைகளை தீா்த்து வைப்பாா்.
குடிநீா் பில்லிங், பாதாளச் சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து கேள்விகளை, குறைகளை தெரிவித்து தீா்வுகாணலாம். குறைகளை சுட்டிக்காட்டும்போது, வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா் முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...