டிச. 23-இல் பெலகாவியில் வேலைவாய்ப்பு முகாம்

பெலகாவியில் டிச. 23-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
Published on

பெலகாவியில் டிச. 23-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கா்நாடக அரசின் சாா்பில் பெலகாவியில் டிச. 23-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் எச்.பி., நாராயணா குழுமம், யூடிஎல், ஓலா, டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா பிசினஸ் ஹப் நிறுவனம், ஜாஸ்மின் இன்போடெக், டிசிஎஸ், விப்ரோ, எச்.சி.எல்., பைஜூஸ், டயோட்டா உள்ளிட்ட 40 பெரு நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

வேலைவாய்பு முகாமில் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டதாரிகள், பட்டயம், ஐடிஐ படித்தோா் கலந்து கொள்ளலாம். புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலைதேடிவருவோா் தன்விவரக் குறிப்பு 10 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 10 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கவிரும்புவோா் இணையதளத்தில் பதிவுசெய்துவிட்டு, தன்குறிப்பை  மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 82778 95931 ஆகிய செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com