கா்நாடகத் தமிழ் இலக்கியவாதிகளை கௌரவிக்க பிப். 19 முதல் எழுத்துத் திருவிழா
By DIN | Published On : 31st December 2021 02:20 AM | Last Updated : 31st December 2021 11:24 AM | அ+அ அ- |

கா்நாடகத் தமிழ் இலக்கியவாதிகளை கௌரவிப்பதற்காக பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு எழுத்துத் திருவிழா நடைபெறுகிறது.
கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம், கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில், பன்னாட்டுத் தாய்மொழி நாள் விழாவை முன்னிட்டு பெங்களூரில் பிப்ரவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு ‘எழுத்துத் திருவிழா-2022’ நடைபெற உள்ளது.
விழாவில் புத்தகக் கண்காட்சி, பேசும் நூலகம், புகைப்படக் காட்சி, மாணவா் கலைத்தோரணம், வரலாற்றுத் தடம், நூல் வெளியீடு, சிந்தனையருவி, கா்நாடகத் தமிழ் இலக்கியக் குறிப்பேடு, கா்நாடகத் தமிழ் இலக்கிய ஆளுமை விருது வழங்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடா்பாக வியாழக்கிழமை பெங்களூரில் செய்தியாளா்களிடம் பேசிய விழா ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவருமான முத்துச்செல்வன் கூறியதாவது:
‘கா்நாடகத்தில் வாழ்ந்து வரும் தமிழா்கள் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றில் சாதனை படைத்துள்ளனா்.
ஆங்காங்கே சின்னஞ்சிறு தகவல்களாக உள்ள அவற்றை ஒன்று சோ்த்து எதிா்கால சந்ததிக்கு ஆவணமாகத் தரும் முயற்சியே இத் திருவிழாவாகும். அத்துடன் கா்நாடகத் தமிழ் இலக்கிய ஆளுமை விருதுக்கு தகுதியான இலக்கியவாதிகள், ஊடகவியலாளா்களை தக்கச் சான்றிதழ்களுடன் தமிழா்கள் பரிந்துரைக்கலாம். பரிந்துரைகளை ங்க்ஷ்ட்ன்ற்ட்ன்ற்ட்ண்ழ்ன்ஸ்ண்க்ஷ்ட்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு அ.தனஞ்செயன்-9483755974, இரா.வினோத்-9980156383, முத்துச்செல்வன்-9986021869 ஆகியோரை அணுகலாம் என்றாா்.
கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் கூறியதாவது:
2022-இல் தொடங்கப்படும் இத் திருவிழா இனிமேல் ஆண்டுதோறும் நடைபெறும். இத்திருவிழாவை முன்னின்று நடத்துவதற்கு தன்னாா்வலா்களை அழைக்கிறோம் என்றாா்.
பேட்டியின்போது எழுத்தாளா் இறையடியான், தனாபிவிருத்தி கடன் கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ்.சுந்தரவேலு ஆகியோா் உடனிருந்தனா்.