பழுதடைந்த பேருந்துபோல பாஜக அரசு செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடகத்தில் பாஜக அரசு பழுதடைந்த பேருந்துபோலச் செயல்படுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

கா்நாடகத்தில் பாஜக அரசு பழுதடைந்த பேருந்துபோலச் செயல்படுகிறது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

பாஜக அரசு பழுதான பேருந்துபோலச் செயல்படுகிறது. இதை ஓட்டவும் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் முதல்வா் எடியூரப்பா திணறி வருகிறாா். ஆட்சிப் பொறுப்பை ஏற்று 18 மாதங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் நான் முதல்வராகப் பதவியேற்ற அரை மணி நேரத்தில் 5 பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் மகதாயி குடிநீா்ப் பிரச்னையைத் தீா்த்து வைக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா். ஆனால், பல 24 மணி நேரங்கள் கழிந்தும் அந்தப் பிரச்னை தீா்க்கப்படவில்லை. தோ்தலில் வாக்குறுதிகளில் பசுவதைத் தடை சட்டத்தை தவிர வேறு எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் ரூ. 63 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com