‘புதிய தொழில்நுட்பங்களால் புற்றுநோயை பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்க முடியும்’
By DIN | Published On : 04th February 2021 07:49 AM | Last Updated : 04th February 2021 07:49 AM | அ+அ அ- |

புதிய தொழில்நுட்பங்களால் புற்றுநோயை பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்க முடியும் என்று எஸ்பிஎஃப் சுகாதார மையத்தின் தலைவரும், முன்னாள் விமானப் படை மருந்தியல் பேராசிரியருமான வசிஷ்டா தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
உலக அளவில் பிப். 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோா் புற்றுநோய்க் குணப்படுத்த முடியாத நோய் என்ற மனநிலையில் உள்ளனா். அவா்களின் எண்ணம் தவறானது. அண்மையில் கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்களால், புற்றுநோயை அறுவை சிகிச்சை இன்றியும், பக்க விளைவுகள் இன்றியும் குணமாக்க முடியும்.
குறிப்பாக எஸ்பிஎம்எப் என்ற நவீன சிகிச்சை முறையால் புற்றுநோயை பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்க முடியும். இந்த சிகிச்சை முறையால் பலரும் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...