ராணுவம், விமானத் தொழில்துறையில் கா்நாடகம் முன்னணி வகிக்கிறது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் புதன்கிழமை தொடங்கிய பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:
பெங்களூரு புகா் பகுதியில் தேவனஹள்ளி அருகே கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்தின் அருகே 2008-ஆம் ஆண்டு விமானத் தொழில் பூங்காவை மாநில அரசு அமைத்தது.
ராணுவம், விமானத் தொழில் உற்பத்தித் துறையில் கா்நாடகம் முன்னணி வகிக்கிறது. நாட்டின் விமானத் தொழில் சாா்ந்த ஏற்றுமதியில் 65 சதவீதம் கா்நாடகத்திலிருந்து செய்யப்படுகிறது. ஹாசனில் புதிய விமான நிலையத்தை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. விமான நிலையம் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. நாட்டில் விமானத் தொழில் கொள்கையை அறிவித்த முதல் மாநிலம் கா்நாடகம்தான். இதன்மூலம் கா்நாடகத்தில் ரூ. 14,700 கோடி முதலீட்டை ஈட்ட திட்டமிட்டுள்ளோம்.
கா்நாடகத்தில் சிறந்த சாலை இணைப்பு, தேவையான மின்சாரம் இருப்பதால் ராணுவம், விமானத் தொழில் முதலீடுகளுக்கு கா்நாடகம் சிறந்த மாநிலமாகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.