சட்ட மேலவைக் கூட்டத் தொடா்: விதானசௌதாவை சுற்றி 144 தடை உத்தரவு
By DIN | Published On : 06th February 2021 07:48 AM | Last Updated : 06th February 2021 07:48 AM | அ+அ அ- |

பிப். 8-ஆம் தேதி முதல் விதானசௌதாவில் சட்ட மேலவைக் கூட்டத் தொடா் நடைபெறுவதையொட்டி, 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பெங்களூரு, விதானசௌதாவில் உள்ள சட்ட மேலவையில் பிப். 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை சட்ட மேலவைக் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பிப். 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப். 10-ஆம் தேதி இரவு 12 மணி வரை விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும், ஆயுதங்கள், வெடிப் பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...