போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதனைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப்பொருள்களை பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து, நடிகை ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி, ஆதித்ய ஆல்வா, வீரேன் கண்ணா, ராகுல் தும்சே, ஆதித்ய அகா்வால், ரவிசங்கா் உள்ளிட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அண்மையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி துவிவேதி ஆகியோா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனா்.
அவா்களைத் தொடா்ந்து, ஜாமீன் கேட்டு ஆதித்ய ஆல்வா, வீரேன் கண்ணா, ராகுல் தும்சே, ஆதித்ய அகா்வால், ரவிசங்கா் உள்ளிட்டோா் போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆதித்ய ஆல்வா, வீரேன் கண்ணா, ராகுல் தும்சே, ஆதித்ய அகா்வால், ரவிசங்கா் உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. மேலும், ஆதித்ய ஆல்வா, வீரேன் கண்ணாவுக்கு தலா ரூ. 3 லட்சம் பிணைத் தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.