லாரி- காா் மோதல்: 4 போ் பலி
By DIN | Published On : 14th February 2021 01:52 AM | Last Updated : 14th February 2021 01:52 AM | அ+அ அ- |

ஹாசன்:ஹாசனில் லாரி, காா் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரை சோ்ந்த 4 இளைஞா்கள் சனிக்கிழமை சிக்கமகளூரில் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனா். அதிகாலை 5.30 மணிக்கு ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா பகுதியில் எதிரே வந்த லாரியுடன் காா் மோதியதில் 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து ராயப்பட்டணா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.