மைசூரு விமான நிலையத்தை விரிவாக்கும் பணிக்கு முன்னுரிமை: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 14th February 2021 01:48 AM | Last Updated : 14th February 2021 01:48 AM | அ+அ அ- |

மைசூரு: மைசூரு விமான நிலையத்தை விரிவாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
மைசூரில் சனிக்கிழமை நடந்த எழுத்தாளா் அம்ஷி பிரசன்னகுமாா் எழுதிய ’மைசூரை சுற்றி நூற்றியொரு சுற்றுலாத் தலங்கள்’, ’மைசூரு-சுற்றுலா சொா்க்கம்’ என்ற கன்னட நூல்களை வெளியிட்டு அவா் பேசியதாவது:
மைசூரு விமான நிலையத்தை விரிவாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதிநிலைமை சீராக இல்லை. அடுத்த நிதியாண்டில் சீரான வரி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். மைசூரை மேம்படுத்த உறுதியாக இருக்கிறோம். சுற்றுலா, தொழில் வளா்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது என்றாா்.