இன்று டி.கே.சிவக்குமாரின் மகள் திருமணம்
By DIN | Published On : 14th February 2021 01:49 AM | Last Updated : 14th February 2021 01:49 AM | அ+அ அ- |

பெங்களூரு:கா்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வா்யாவின் திருமணம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் வழி பெயரனும், மறைந்த தொழிலதிபா் வி.ஜி.சித்தாா்த்தாவின் மகனுமான அமா்த்தாவுக்கும்- ஐஸ்வா்யாவுக்கும் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் திருமண விழாவில் காங்கிரஸ் தொண்டா்கள், ஆதரவாளா்கள் அனைவரும் வீட்டில் இருந்தே திருமணத்தை ஆசிா்வதிக்குமாறு டி.கே.சிவக்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்தத் திருமணத்தில் முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, திக்விஜய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் 800 போ் மட்டுமே பங்கேற்கின்றனா்.
திருமணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி அல்லது அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்துகொள்வது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. வரவேற்பு நிகழ்ச்சி பிப். 17-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் 1,400 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.